Sunday, February 13, 2011

10.02.2011 அன்று இயற்கை எய்திய என் தாத்தா (எ) சிற்றப்பா (எ) T.V.ராஜேந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம்

தங்களை  முதியவர்   என்று  மனதில் தோன்றாத அளவில்
எம்முடன்  நண்பரை  போல்  பழகிநீர்,
என்    தாய்க்கு   சிற்றப்பா   நீங்கள் , ஆனால்
நீங்கள்  எம்மை  அல்ல  இவ்வுலகை  விட்டு  நீங்கும்  வரை
மனதார  உம்மை  சிற்றப்பாவாக  கருதினேன்!!

யாரும்  இருக்கும்  வரை  அவரின்  மதிப்பு  தெரியாது
ஆனால் அவர்  பிரிந்து  விட்டாலோ  அவரின்  அருமை   பெருமைகளை   அனைவரும்   பேசுவர் ,
ஆனால்  நீங்கள்   அடி   முதல்  நுனி  வரை  பயன்படும்
வாழை   மரம்  போல்  அனைவர்க்கும்   உதவியாய்  இருந்தீர்,
நீர்  எப்போதும்   ஓர்  ஈடுகட்ட  முடியாத   இழப்பு.

உம் ஆத்மா  சாந்தி  அடைய  பிராத்திக்கும்  ,
இப்பூவுலகில்   உங்கள்  அன்பிற்கு  ஏங்கும்   ஆன்மாக்கள்...